புதன், 31 ஜூலை, 2013

வெண்ணிற இரவுகள் நாவல் சுருக்கம்





0


"உலகத்தார் அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்திய
 காதல் கதை" என்று பலராலும் வியந்து பாராட்டப்பட்ட இந்த நாவலை
படிக்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாளாகஇருந்தது.
எப்படியோ ஒரு நாள் தேடித் பிடித்து படித்து முடித்துவிட்டேன்.

நான்
 ரசித்த நாவல்களில் இதுவும் ஒன்று அதனை உங்களோடு
பகிரலாம் என்றுபதிவும் செய்கிறேன்.
இது ஒரு குறு நாவல் தஸ்தாவஸ்கி என்ற ரஷ்ய எழுத்தாளரால் எழுதப்பட்டது.அவரின் ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று தான் வெண்ணிற இரவுகள்.
1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது.
162 ஆண்டுகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும்கதாபாத்திரங்களின் அடங்காத இதயதுடிப்பும் காதலின் மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது.

இந்த நாவலின் கருவை வைத்து தான் இயற்கை திரைப்படம் எடுக்கப்பட்டது. கதையை ஆசிரியர் நகர்த்தும் விதம் அபாரம். ஆரம்பம் முதல் கதையின் முடிவு வரை அணைத்து நிகழ்வுகளும் வெகு சுவாரசியமாக உள்ளன. ஆனால் நாவலின் உச்சக்கட்டம் படிப்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.


இரண்டு
 ஆண்கள் ஒரு இளம் பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும்பெண்ணும் சந்தித்து கொள்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள். இது தான் கதை . ஒரு நிமிடம் படிப்பதை நிறுத்த வேண்டாம் இது தான் கதையாஎன்று . இந்த கதை கதாபாத்திரங்களுக்கு இடையில் எப்படி காதல் உருவாகிறது என்பதும், காதலர்கள் எதனால் பிரிகிறார்கள் என்பதுமே நாவலின் திருப்பம்.

ஆற்றங்கரையோரம்
 உள்ள ஒரு வீதியை கடந்து செல்லும் கதாநாயகன் அங்கே உள்ள ஒரு வீட்டினை கடந்து செல்கிறான் . அவனால் ஒரு போதும் மறக்கமுடியாத பெண் வசித்தவீடது. அந்த வீடு இப்போது உருமாற துவங்கியிருக்கிறது. அதை பற்றிய தனது கடந்தகால நினைவுகளில் மூழ்கத் தொடங்குகிறான் .

நாவலின் மற்றொரு வியப்பு என்னவென்றால், கதையை சொல்பவனுக்கு பெயர் கிடையாது. வயது இருபத்தியாறு நடக்கிறது என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறான். அவன் அதுவரை எந்த பெண்ணோடும் பேசிபழகியது கிடையாது. அவன் கனவில் வந்த ஒன்றிரண்டு பெண்களை தவிர வேறு பெண்களை அவனுக்கு தெரியாது. பெண்களை கண்டாலே கூச்சத்தில் ஒதுங்கிவிடுவான். பேச்சு தடுமாற ஆரம்பித்துவிடும்.
 

அவன்
 பீட்டர்ஸ்பெர்க்கின் விசித்திரமான சந்து ஒன்றில் குடியிருக்கிறான். அது பகலில் கூட சூரியன் வராத வீதி. அங்கே உண்மையில் வேறு ஒரு சூரியன் ஒளிர்கிறது. அதன்விசித்திரமான வெளிச்சத்தில் அவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். எது அந்த பீட்டர்ஸ்பெர்க்கின் இரண்டாம் சூரியன்.. தோற்று போன, அடையாளமற்று போன, கைவிட்டு போனபலரின் நிறைவேறாத ஆசைகள் தான் அங்கே இன்னொரு சூரியானாக ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. அவை இரவிலும் மறைவதேயில்லை. இதை ஆரம்பமாக வைத்துக்கொண்டுகதையை சொல்ல ஆரம்பிக்கிறான்
சில வருடங்களுக்கு முன்பாக ஒரு இரவில் தான் சந்தித்த பெண்ணை பற்றி சொல்கிறான். அவள் குழப்பமானவள். செய்வதறியாமல் தடுமாறுகின்றவள். இதுவரை எந்தபெண்ணிடமும் பேசியிராத அவனை அந்தபெண்ணின் துயரநிலை பேசவைக்கிறது. தன்னை மீறி அவளிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். எதை எதையோ பேசுகிறான். தன்னால்கோர்வையாக பேசமுடியாது என்பதை பற்றி விரிவாக பேசுகிறான். மனம் தடுமாறுகிறான். அவளோ அவனிடம் எந்த வேறுபாடும் காட்டாமல் மிக இயல்பாக பேசுகிறாள். மறுநாள்சந்திக்கலாம் என்று விடைபெற்று போகிறாள். அந்த இரவு முடியும் போது அந்தப் பெண்ணின் பெயர் கூட அவனுக்கு தெரியாது.

இரண்டாம்
 இரவில் அவளுக்காக காத்திருக்கிறான். தன்னோடும் ஒரு பெண் பேசுகிறாள் என்பதே அவன் தன வாழ்வில் பெற்ற மிகப்பெரிய சந்தோஷம் . அதனை நினைத்து நினைத்துஆனந்தமடைகிறான். அவள் வருகிறாள். தயக்கம் குறைந்து அவளிடமே என்றாவது ஒரு நாள் தன்னோடும் ஒரு பெண் பேசுவாள் என்று கனவு கண்டுகொண்டிருந்தேன். அதுநிஜமாகிவிட்டது என்று பிதற்றுகிறான். அவள் ஏன் இவ்வளவு பதற்றம் கொள்கிறான் என்று வியப்படைகிறாள்.

உண்மையில்
 பெண்கள் விசித்திரமானவர்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் , என்ன பிடிக்கிறது எதற்காக அழுகிறார்கள் என்று எளிதாக புரிந்துகொள்ளவே முடியாது. அது ஒருவேளை அது ஆண்களின் தவறாகவும் இருக்கலாம். அல்லது பெண்களின் இயல்பே அப்படியானதாகவும் இருக்கலாம் என்று அவனது தெளிவற்ற எண்ணங்களையும் அதற்கு அவள்சொல்ல வேண்டிய பதில்களையும் அவனே பேசுகிறான். அது அவளை வசீகரிக்கிறது. இதுவே அவளை அவனிடம் விழ வைக்கிறது. 

நீ மிகவும் நல்லவன், பெண்ணோடு பேசுவது பெரிய விசயமில்லை என்று ஆறுதல் சொல்கிறாள். அவனோ நான் எதிர்பாராமல் அறைக்கு வரும் நண்பனுடன் பேசுவதற்கே தயங்க கூடியவன். என்னிடம் இப்படியான சூழலில் ஒரு பெண் பேசுகிறாள் என்பது இயல்பானதில்லை என்று துடிக்கிறான். அப்படியில்லை எந்த பெண்ணும் தன்னோடு ஒரு ஆண் சில நிமிசங்கள் பேசுவதை வேண்டாம் என்று பிடிவாதமாக விலக்கி போகிறவள் இல்லை. நீ பேச தயங்கியிருக்கிறாய். உன்னை வெளிப்படுத்திக் கொள்வது தான் உனது பிரச்சனை என்கிறாள்.
அவன் ஆச்சரியமாக இருக்கிறது சமார்த்தியமும் அழகும் ஒன்று சேர்வது அபூர்வம். நீ இரண்டும் ஒன்றாக கொண்டிருக்கிறாய் என்கிறான். அவள் புன்னகையுடன் நீ பிரமாதமாக பேசுகிறாய். உண்மையில் கூச்சப்படும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் என்கிறாள். அவன் உடனே என்னிடம் உள்ள ஒரே கவசம் கூச்சம் தான். அதை இழந்துவிட்டு என்னசெய்வது என்று ஒன்றுமே தெரியாதவன் போல் கேட்கிறான். மறு நிமிடமே உன்னிடம் நான் இப்படி பேசியிருக்க கூடாது. என் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லிவிட்டேன் என்று வெட்கத்துடன் புலம்புகிறான்.
கண்ணாடியில் பட்டு ஒளி பிரதிபலிப்பதை போல அவள் முன்னால் அவனது எண்ணங்கள்ஒவ்வொன்றாக பிரதிபலிப்பாகின்றன. அதுவரை மனதில் ஊறிக்கிடந்ததை அவளதுவருகையேவெளிப்படுத்த வைக்கிறது. எது அவனை இப்படி நிலை கொள்ளாமல் தள்ளாடசெய்கிறது.
உண்மையில் தனது தனிமையை கண்டே நடுங்குகிறான். நண்பர்களும் கைவிட்டு போனார்கள் என்ற சூழலில் என்ன செய்வது என்றே அவனுக்கு தெரியவில்லை. அவன் மனதுவெறுமையால் எதைஎதையோ கற்பனை செய்கிறது. அந்த கற்பனை அவனை மேலும் உலகை நோக்கி ஆசையுடன் உந்தி தள்ளுகிறது.
அவன் பகலில் ஒளிந்து கொள்கிறான். இரவில் மட்டுமே வெளியே வருகிறான். இரவில் உறக்கமற்று நடமாடுபவர்கள் நிம்மதியற்றவர்கள். வீடு அவர்களை சாந்தம் கொள்ள செய்யமுடியவில்லை என்று கூறுகிறான். இயற்கையின் மாறுபாடு போன்றதே அவன் மனப்போக்கும்.
இரவில் ஒளிரும் சூரியனால் என்ன பயனிருக்கிறது. பகல் ஏன் நீண்டு போகிறது. பகல் முடியாமல் இரவு வருவதில்லை. ஆனால் கோடைகால இரவு மட்டும் ஏன் சிறியதாக இருக்கிறது. என்ன கொடுமை . என்று தனது மனதின் நிறைவேறாத காதலை போன்றதே இத்தகைய இரவுகள் என்று புலம்புகிறான்.
அவனது இரண்டாவது இரவில் அவள் பெயர் நாஸ்தென்கா என்று அறிந்துகொள்கிறான். அந்த பெயரை சொல்வதிலே தித்திப்பு கொள்கிறான். திரும்ப திரும்பி சொல்லிகளிப்புறுகிறான். திடீரென அவளது பெயர் சுவைக்கபடும் இனிப்பு மிட்டாய் போலாகிறது.அனால் பெயரை உச்சரிக்க தடுமாறினான். அந்த சொல்லை தன் நாவில் கரைந்துபோகசெய்கிறான். நாஸ்தென்கா அவனது மிதமிஞ்சிய உணர்ச்சிப் பெருக்கை புரிந்து கொள்கிறாள். தனது கதையை அவனிடம் பகிர்ந்து கொள்கிறாள்
நாஸ்தென்காவிற்கு வயது பதினேழாகிறது. அவள் பாட்டியுடன் ஒரு வீட்டில் வசிக்கிறாள். பாட்டிக்கு கண்தெரியாது. அவர்கள் வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். அங்கே ஒரு இளைஞன் குடிவருகிறான். பாட்டி அவனோடு பேசக்கூடாது. பழக்கூடாது என்று கண்டிப்பாக இருக்கிறாள். எங்கே தன்னை மீறி பேத்தி போய்விடுவாளோ என்று அவளது பாவாடையை தன்னோடு ஊக்குபோட்டு குத்திக் கொள்கிறாள். அதனால் நாஸ்தென்காவால் எழுந்து போக முடியாது. அப்படியிருந்தும் நாஸ்தென்கா ஓர் இளைஞனால் வசீகப்படுகிறாள்.
அவ்விளைஞன் அவளுக்காக படிக்க புத்தகங்கள் தருகிறான். அந்த புத்தகங்கள் அவளை மாற்ற துவங்குகின்றன. உலகம் வெளியில் எப்படி இயங்கி கொண்டிருக்கிறது என்பதை புத்தகங்களே உணர்த்துகின்றன. புத்தகங்கள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிடுகிறாள். அதை பயன்படுத்தியே அவளை காதலிக்க துவங்குகிறான் அந்த இளைஞன் .

அவளையும் பாட்டியையும் அழைத்து கொண்டு நாடகம் பார்க்க செல்கிறான். அவன் மீது தீராத காதல் கொள்கிறாள் நாஸ்தென்கா. அவன் ஊருக்கு கிளம்பும் நாளில் தானும் கூட வருவதாக பெட்டியோடு கிளம்புகிறாள். அதை எதிர்பாராத அவன் திரும்பி வந்து அவளை அழைத்துபோவதாக வாக்குறுதி தந்து விடைபெறுகிறான். அன்றிலிருந்து அவனுக்காகவே நாஸ்தென்கா காதலோடும், அவன் நினைவுகளோடும் காத்திருக்கிறாள்.

அவள் பாட்டியோடு பிணைக்கபட்டு இருப்பதில் இருந்து விடுபட விரும்புகிறாள். அதுவே ஒருவனை காதலிக்கும்படியாக செய்கிறது. அந்த காதலை அவன் உணர்வாதாக இல்லை. அவள் தீவிரமாக காதலை நம்ப துவங்குகிறாள். காத்திருப்பதன் வழியே தான் காதல் உறுதியாகிறது என்று சொல்கிறாள்

நாஸ்தென்காவை
 காதலிப்பவன் The Barber of Seville என்ற நாடகத்தைக் காண அழைக்கும் போது அவளிடம் துளிர்ப்பது அவளது கடந்த கால காதலே. இந்த நாடகத்தின் கதாநாயகிகாதலுக்காக ஏங்குபவள்.இந்நாடகமும் நாஸ்தென்காவின் வாழ்க்கையும் ஒரு தளத்தில் ஒன்று போலவே உள்ளது. அதை ஒப்பிட்டுக் காட்டுவதற்காகத்தான் தஸ்தாயெவ்ஸ்கி பயன்படுத்தியது போல் தெரிகிறது.

நாஸ்தென்கா தன்னை காதலித்து கைவிட்டவன் மீது கோபம் கொள்ளவில்லை. தன்னை அவன் புரிந்து கொள்ளவில்லையே என்றே வருத்தபடுகிறாள். அதே மனநிலை தான் கதை சொல்லும் கனவுலகவாசிக்கும் ஏற்படுகிறது.
 அவர்களுக்கு வார்த்தைகள் போதுமானதாகயில்லை. பேசி களைத்து போகிறார்கள். ஆனால் இருவருமே உடலை பெரிதாக எண்ணவில்லை. உடல் இல்லாமல் வார்த்தை வழியாகவே ஒருவரையொருவர் கட்டிக் கொள்ளவும் அரவணைக்கும் விரும்புகிறார்கள்.

அந்த பெண்ணிற்கு உதவுவதற்காக அவள் காதலனை தேடி போகிறான். அவளது கடிதத்தை தருகிறான். ஆனால் காதலன் நாஸ்தென்காவை பிடிக்கவில்லை என்று விலக்கவே அவளுக்காக துயரம் கொள்கிறான்.
 சில நிகழ்வுகளுக்கு பிறகுஅவள் தன் காதலனைக் அடைகிறாள் .

அப்போது திடீரென காதலன் முன்பாகவே நாஸ்தென்கா ஒடிவந்து கனவுலகவாசியை கட்டிக் கொள்கிறாள். அந்த அரவணைப்பு பிரிவின் வலியை அவனுக்குள் நிரப்புகிறது. நிமிச நேரம் அந்த அணைப்பு நீள்கிறது. அவள் கனவுலவாசியிடம் அப்போது தான் உணர்ந்தால் அவன் மீதும் நாம் ஏதோ ஒரு வித அன்பு வைத்துள்ளோம் என்பதை. உடனே அவள் அவனிடம் , என்னைத் தவிர எந்த பெண்ணிடமும் அன்பு வைக்க கூடாது, என்னை மட்டும் தான் நேசிக்க வேண்டும் என கூறினாள்.

பிறகு காதலன் உடன் போய்விடுகிறாள். அவள் அணைத்துக்கொண்ட இந்த ஒரு நிமிடம் போதும் வாழ்வதற்கு என்று அகமகிழ்ந்து நகர்கிறான் கனவுலகவாசி.
இந்நாவல்
 வலியும் காதலுக்கு அவசியம் என்றே என்ன தோன்றுகிறது. வலியில் இருந்தே காதல் வளர்கிறது.பிரிவே காதலை உணர செய்கிறது.

நன்றி : தமிழ் மதி




இனி நமது சூக்சுமம்

நாஸ்தென்கா
ஒரு
வெறுமையான
பெண்ணுயிர்.

அந்தப் பெண்மைக்கு காவல்

அங்கே ஓர்
முதிர்ந்த நிரல்
தாய்க்கிழவி.

முதிர்ந்த நிரலுக்கு பொறுப்புணர்ச்சி அதிகம்.

நாஸ்தென்காவுக்கு
ஒரு
உணர்வும்
ஒரு
அறிவும்
உலகில் வாழ
த் தேவைப்பட்டது.

அது
எதிர்பாலினரால்
உடனேக் கிடைக்கிறது.

அவளது
முதல் காதலன் அவளது
உணர்ச்சி நிரல் காதலன்.

அடுத்தக் காதலன்
அறிவு நிரல்க் காதலன்

அறிவு அறிவை மணக்க
முடிவு செய்கிறது
இயற்கை.

(கண்ணாடியில் பட்டு ஒளி பிரதிபலிப்பதை போல அவள் முன்னால் அவனது எண்ணங்கள்ஒவ்வொன்றாக பிரதிபலிப்பாகின்றன= என்கிற இடத்தில் அவளது அறிவு ஆதிக்கம் சுட்டிக்காட்டப் படிறது )

( ஒரு நிலையில் அவள் பாட்டியோடு பிணைக்கபட்டு இருப்பதில் இருந்து விடுபட விரும்புகிறாள் = தனது ஆவல் தனது பொறுப்புணர்வையும் விட்டு விட மேலிடுகிறது )

அவளது
இச்சா சக்தியே
அவளது கனவுலக வாசி.

( ஆனால் இருவருமே உடலை பெரிதாக எண்ணவில்லை. உடல் இல்லாமல் வார்த்தை வழியாகவே ஒருவரையொருவர் கட்டிக் கொள்ளவும் அரவணைக்கும் விரும்புகிறார்கள்.) = அறிவு பரிமாற்றம் என்பது ஜெராக்ஸ் பிரதிப் போன்றது.
உணர்வுப் பரிமாற்றம் என்பது குளோனிங் போன்றது.

அப்போது திடீரென காதலன் முன்பாகவே நாஸ்தென்கா ஒடிவந்து கனவுலகவாசியை கட்டிக் கொள்கிறாள். அந்த அரவணைப்பு பிரிவின் வலியை அவனுக்குள் நிரப்புகிறது. நிமிச நேரம் அந்த அணைப்பு நீள்கிறது. அவள் கனவுலவாசியிடம் அப்போது தான் உணர்ந்தால் அவன் மீதும் நாம் ஏதோ ஒரு வித அன்பு வைத்துள்ளோம் என்பதை. உடனே அவள் அவனிடம் , என்னைத் தவிர எந்த பெண்ணிடமும் அன்பு வைக்க கூடாது, என்னை மட்டும் தான் நேசிக்க வேண்டும் என கூறினாள்.

குளோனிங்கில் சொல்லப் பட்ட விவரம் பின் வருமாறு :- என்னைத் தவிர எந்தப் பெண்ணிடமும் அன்பு
வைக்கக் கூடாது .என்னை மட்டும் தான் நேசிக்க வேண்டும்.

அறிவால் எடுக்கப்படும்
ஜெராக்ஸ் அறிவு நிரலில்
இவ்வளவு உயிரோட்டமாக செய்தியைச் சொல்ல முடியாது.


அறிவுக்கு நிரல் திடம் கிடையாது.

ஒருப்பரிமாற்றம் முடிய
அதற்கு ஒரு ஆயுள் வேண்டும்


உணர்ச்சிக்கு ஒரு நிமிடமேப் போதும்.


உன் உணர்ச்சியை
உன் தார்மீகத்தில்
வை.